Doesn't suit? No problem! You can return items for up to 30 days
You won't go wrong with a gift voucher. The gift recipient can choose anything from our offer.
Up to 30 days for returns
"சங்கிலிக் குறவன் " முதலிய கதைகளை நூல் வடிவில் வெளியிட கவிஞர் அவர்களிடம் அனுமதி கோரினோம். அன்னார் அனுமதியுடன் ஆசியும் தந்தார்கள்,
சங்கிலிக் குறவன், இலுப்பமரப் பிசாசு என்ற கதைகள், கவிஞர் தன் தாயார் சொல்லக் கேட்பது போன்று எழுதப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கவிஞரின் தாயன்பு வெளிப்படுவதோடு, மக்களுக்குக் கதையின் மூலம் நல்ல கருத்துக்களையும் பண்பாட்டையும் புகட்டிய வீரப் பெண்மணிகளின் வரிசையில் அன்னாரும் இடம் பெறுகிறார்,
கவிஞரின் தகப்பனார் ஏட்டு வெங்கட்ராம பிள்ளை தாமே துப்பறிந்து கோயில் திருட்டுச் சம்பவத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் உத்தியோகத்தில் அவர் காட்டிய திறமை வெளிப்படுகிறது. அக்கதையைக் கவிஞர் தகப்பனார் கூறுவது போல் அமைத்து கதைக்கு மேலும் மெருகு கொடுத்து சுவை சொட்டச் சொட்டக் கூறுகிறார். இது படிப்போருக்குப் பேரின்பமளிக்கும்.
மேச்சேரி என்ற ஊரில் என் கணவர் ஏட்டாக இருந்தார். அந்தக் காலத்தில் அந்த வட்டாரத்தில் கன்னக் களவுகள் அதிகம். அந்தக் குற்றங்களைச் செய்பவர்கள் பெரும்பாலும் குறவர்கள். கன்னம் வைப்பதில் அவர்கள் மிகவும் கைதேர்ந்தவர்கள். குறவர்களின் குற்றங்களைக் கண்டு பிடிப்பதில், என் கணவர் அதிக அனுபவமுள்ளவர் என்று எண்ணி, அவரை மேச்சேரிக்கு மாற்றி விட்டார்களாம்.
என் கணவர் தமது போலீஸ் ஸ்டேஷனின் எல்லைக் குட்பட்ட கிராமங்களில் உள்ள எல்லாக் குறவர்களையும் (குற்றஞ் செய்து ஏற்கெனவே தண்டனை யடைந்திருக்கிற) ' கே-டி'க் களையும் ஒரு ஜாபிதா எடுத்து, ஒவ்வொரு வாரமும் சந்தை நாளில் அவர்களெல்லாரும் எங்கள் வீட்டுக்கு முன்னால் வந்து கூடும்படி செய்வார். அவர்களுடன் சிநேக பாவத்துடனே பேசுவார்.
Hi! I'm Libroamiko, your book advisor.
How can I help you?