Doesn't suit? No problem! You can return items for up to 30 days
You won't go wrong with a gift voucher. The gift recipient can choose anything from our offer.
Up to 30 days for returns
ஆண்டுதோறும் மணவழகர் மன்றத்தினுடைய அழைப் பினையும், மன்றத்தினுடைய காப்பாளர் நீதிபதி கோகுல் அவர்களுடைய அன்புக் கட்டளையையும், அருமை நண்பர் கி. வீரமணி அவர்களுடைய அன்பு வரவேற்பையும் பெறுகின்ற அதே வாய்ப்பு இந்த ஆண்டும், அதிலும் குறிப்பாக திரு.வி.க. அவர்களுடைய நூற்றாண்டு விழா நேரத்தில், எனக்குக் கிடைத்திருப்பது குறித்துப் பெருமையடைகின்றேன். பெரு மகிழ்வு கொள்கின்றேன்.
இங்கே வரவேற்புரையாற்றிய மணவழகர் மன்றத்தினுடைய செயலாளர், 'கருணாநிதி அவர்களை முதலமைச்சராக இருந்தபோதும் அழைத்திருக்கிறோம் ; அப்பொழுதும் வந்திருக்கிறார் : பதவியிலே இல்லாத நேரத்திலும் அழைத்திருக்கிறோம் இப்பொழுதும் வந்திருக்கிறார்'' என்று குறிப்பிட்டார். பதவியிலே இல்லாத நேரத்திலே அழைத்தால் தான் வருவேன் என்று நீங்கள் எண்ணத் தேவையில்லை. முதலமைச்சராக இருந்தாலும் வருவேன், தமிழ்வளர்த்ததென்றல் திரு. வி. க. விழாவில் சாதாரண கருணாநிதியாக இருந்தாலும் எந்த நிலையிலிருந்காலும் வந்து வாழ்த்த - அவரைப் பின்பற்ற - அவருடைய கொள்கை களைப் போற்ற- அவருடைய குறிக்கோளை நிறைவேற்ற சாகும் வரையில் தயாராக இருப்பேன் என்பதை மணவழகர் மன்றத்து நண்பர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். பெரிய பொறுப்புக்களில் - பதவிகளில் இருந்தால் மணவழகரை மறந்துவிடுகின்ற மனப்பான்மை நிச்சயமாக எனக்கு வராது என்பதை நண்பர்களுக்கு நான் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
Hi! I'm Libroamiko, your book advisor.
How can I help you?